மணிச் சின்னத்தைக் கைவிடுகிறது ஜே.வி.பி

மக்கள் விடுதலை முன்னணி கட்சி தனது மணிச் சின்னத்தை கைவிடப் போவதாக கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.

இதுவிடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.வி.பி மணிச் சின்னத்தில் போட்டியிடாது எனவும், ஓர் பொதுவான சின்னத்தில் தேர்தலில் களமிறங்கவுள்ள அதேவேளை, 2020ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக பாரிய சக்தியொன்று உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எழுபது ஆண்டுகளாக இந்த ஆட்சியாளர்கள் நாட்டை பின்நோக்கி நகர்த்தியுள்ள நிலையில், இவ்வாறு தொடர்ந்தும் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுடன், இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், நாட்டை நேசிக்கும் பல்வேறு புத்திஜீவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு