பந்து தலையில் தாக்கி பாக். வீரர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் முதல்தர போட்டிகளில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் கிளப் அணியில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, மர்தானில் ஆகஸ்ட் 14ஆம் திகதி இருபதுக்கு இருபது போட்டி ஒன்றில் விளையாடிய போது பவுன்சர் பந்து அவரது தலையில் தாக்கியது. பேட்டிங் செய்தபோது அவர் ஹெல்மெட் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

ஜுபைர் அகமது குவெட்டா பியர்ஸ் அணிக்காக 04 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஜூபைர் அகமது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு