மஹிந்தவின் உறவுகளுக்காக விஷேட நீதிமன்றம்?

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க விஷேட நீதிமன்றம் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு எதிராக விஷேட நீதிமன்றம் அமைத்து, வழக்கு தொடர்ந்து, தண்டனை வழங்கி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்து தாம் வேதனையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 87 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு கிடைத்திருப்பதாக பிரதமர் அண்மையில் பகிரங்கமாக அறிவித்துள்ளதாகவும், சட்டமா அதிபரின் விடயங்கள் குறித்து பிரதமர் எவ்வாறு அறிந்துள்ளார் எனவும், அது குறித்து எவ்வாறு அவரால் கருத்துக்கூற முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ள ஜீ.எல்.பீரிஸ், நாட்டின் சட்டங்கள் அலரிமாளிகையிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு