மஹிந்த காலத்து ஊழல் மோசடிகளுக்காக புதிய நீதிமன்றம்

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த புதிய நீதிமன்றமொன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற குழுவொன்றை நியமித்து அதன் ஊடாக கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், அரசாங்கம் இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைவாக, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, பிரதம நீதியரசர் பிரசாத் டெப்பிடம் மூவர் அடங்கிய நீதிபதி குழாம் ஒன்றை நியமிக்குமாறு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, பிரதம நீதியரசர் இந்த வாரத்தில் இந்த நீதிபதிகள் குழாமை நியமிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகள் சாதாரண வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதனால் ஏற்பட்டுவரும் கால தாமதத்தை தடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய நீதிமன்றமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு