த.தே.கூவை சாடியது ஜே.வி.பி

ஜே.வி.பி.யில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து பல விடயங்களை செய்யும்போது 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு சில பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியதென ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

ஊழல், மோசடிகள் அற்ற நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென நேற்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து கருத்துகள் பரிமாறப்பட்ட நிலையில், குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் நிலாந்தன் உட்பட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கையில் ஊழல்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் கோப்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெளிவுபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தற்போதைய நிலைமை, நல்லாட்சிக்கு முன்னர் இருந்த செயற்பாடுகள், அதன் பின்னரான நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் தமது கவனத்திற்கு இதுவரையில் கொண்டு வரப்படவில்லையென தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இனிவரும் காலங்களில் தாம் இது தொடர்பில் பூரண கவனம் செலுத்துவதாகவும், இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு