இலங்கை மீது காதல் கொண்ட கிரிக்கெட் வீரர்

இலங்கையின் அழகின் மீது ஈர்ப்பு கொண்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அது குறுகிய காலப்பகுதியாக இருந்த போதிலும், தற்போது நீண்டகாலம் இலங்கையில் தங்கிருப்பதால் அதன் அழகினை இரசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், குறிப்பாக, இறுதி டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் நிறைவடைந்த காரணத்தினால் தனக்கு இலங்கையின் அழகை இரசிப்பதற்கு மேலும் சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இரு அணியும் தம்புள்ளை சென்றுள்ள நிலையில், விராட் கோஹ்லி ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார். சீகிரியா மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளை பார்வையிட இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற போதிலும், ஏனைய போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் அவற்றினை பார்வையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு