சந்திரிக்கா தொடர்பில் சொல்ஹெய்மின் கருத்து

இலங்கையில் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் பரம இரகசியமாக பேணப்பட்டு வந்ததாக சர்வதேச ஊடகம் ஒன்றிடம் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்ததாகவும், சமாதான முயற்சிகளில் ஈடுபடுமாறு தமக்கு விடுத்த அழைப்பை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க யாருக்கும் பகிரங்கப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதுபற்றி கொழும்பில் சந்திரிக்கா குமாரதுங்க, மற்றவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகிய இருவருக்குமே தெரிந்திருந்ததாகவும், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இந்த இரகசியம் பேணப்பட்டு, அதற்குப் பின்னரே பகிரங்கப்படுத்தப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான எனது முதலாவது சந்திப்புத் தொடர்பாக, அப்போதைய இலங்கை பிரதமர்கூட அறிந்திருக்கவில்லை எனவும் எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு