உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் தீர்மானம்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம் மலையக மக்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் அதற்கான எதிர்ப்பை பாராளுமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக மலையக மக்கள் முன்னனியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டம் நுவரெலியா பிரதேச செயலகத்தில் கல்வி இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புதிய முறையிலான உள்ளூராட்சி தேர்தல் திருத்ததின் ஊடாக சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசங்களிலும், பரவவலாக வாழும் பிரதேசங்களிலும் மலையக மக்களுக்கு வட்டார தேர்தல் முறைமை பாதிக்காமல் இருக்க வேண்டும் எனவும், இந்த முறை மலையக மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே தற்போது காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வட்டாரங்கள் பிரிக்கும் போது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது. இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வைப்பெற வேண்டுமானால் சிறுபான்மை கட்சிகளான மலைய கட்சிகள்¸ முஸ்லிம் கட்சிகள் உட்பட ஏனைய சிறுபான்மை கட்சிகள் ஒன்றினைய வேண்டுமெனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், இதற்கு மலையக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆயத்தமாகவுள்ளதாகவும், தாங்கள் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உரிய இடத்தில் எதிர்ப்பை ஏற்படுத்துவோம் எனவும், இதனையே எமது கட்சியான மலையக மக்கள் முன்னனி தனது மத்திய குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையிலுள்ள இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் இதற்கு ஆதரவாக இருப்பதால் சிறுபான்மை கட்சிகளின் அபிலாஷையை தட்டிவிட்டு நிறைவேற்ற பெரும்பான்மை கட்சிகள் எத்தனிக்க கூடாது எனவும் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதற்கான சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளதாகவும், இந்த சட்டமூலம் சிறுபான்மை மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு