இன ஐக்கியத்திற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது

இந்நாட்டு மக்களுக்கு தேவையாக இருக்கும் சமாதானம், அபிவிருத்தி மற்றும் இன ஜக்கியத்திற்காக இந்த அரசாங்கமானது தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளதாக புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இரண்டு வருடங்களுக்கு முன் கட்சி ரீதியாக முரண்பட்ட மக்கள் தனிப்பெரும்பான்மையை ஒரு கட்சிக்கு கொடுக்கவில்லை என்பதால், மக்களின் முடிவுக்கு அமைய தேசிய அரசாங்கம் அமையபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் இம்முடிவுக்கு தலைவணங்குகின்ற போதிலும், இம்முடிவுக்கு எதிராக மதகுருமார்களை பிளவுபடுத்தி மக்களுக்குள் முரண்பாடுகளை ஊக்குவித்து, அரசாங்க ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை தூண்டிவிட்டு, அரசாங்கத்திற்கு சிக்கலை உருவாக்குவதன் மூலம் சிலர் தமது இழந்து போன அரசியல் அந்தஸ்தை பெற முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் இந்த நாட்டு மக்களுக்கு தேவையாக இருப்பது சமாதானம், அபிவிருத்தி மற்றும் இன ஜக்கியம். இதற்காக இந்த அரசாங்கம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு