ஐ.எஸ் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கை நோக்கி நகரும் ஈராக் துருப்பு

ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மற்றுமொரு நகரத்தை மீட்க முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், டல் அபார் என்ற நகரத்தை நோக்கி ஈராக்கிய தரைப்படையினர் நகர்வதாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஈராக்கிய பிரதமர் ஹெய்டர் அல் அபாடி உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்த நகரத்திலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் சரணடைய வேண்டும் எனவும், சரணடைய தவறும் பட்சத்தில் அவர்கள் அனைவரும் மரணத்தை எதிர்நோக்க வேண்டிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஷியா முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள இந்த பிரதேசம் ஐ.எஸ். தீவிரவாதிகளினால் கடந்த 2014ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டு, தீவிரவாதிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு