பதவி நீக்கப்பட்டார் டெனீஸ்வரன்?

கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோ கட்சியில் இருந்து 06 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழு நேற்றிரவு 10.30 மணியளவில் வவுனியாவில் நடாத்திய கூட்டத்தின் இறுதியில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கருத்தை அறியாமல் வடக்கு மாகாண முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டமை மற்றும் கட்சியின் ஒழுங்கை மீறியமை குறித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு