கூட்டு அரசாங்கம் என்பதால் இன ஒற்றுமை வராது – ஹக்கீம்

பிரதான அரசியல் கட்சிகளின் தலைமைகள் ஒன்றிணைந்து கூட்டு அரசாங்கத்தை அமைத்தவுடன் இன ஒற்றுமை வந்துவிடாதென நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் நேற்று இடம்பெற்ற கட்டிடத் திறப்புவிழா நிகழ்விவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன்,

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யுத்தத்திற்குப் பின்னர் அபிவிருத்தி என்ற விடயத்தில் இனங்கள் மத்தியிலே புரிந்துணர்வு இல்லை எனவும், அபிவிருத்திகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பில் இனங்களுக்கிடையில் இன்னமும் சந்தேகம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைமைகள் கூட்டரசாங்கத்தை அமைத்தவுடன் இன ஒற்றுமை வந்து விடமாட்டாது. அது அடிமட்ட சமூக மக்களின் புரிந்துணர்விலிருந்து வர வேண்டும் எனவும், அரச ஊழியர் நியமனங்களில், பதவி நிலைகளில், நிறைவேற்று அதிகாரங்களில் சமத்துவம் பேணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், இவ்வாறான பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில்தான் ஒரு நெருக்கடியான ஆட்சியை எங்களுடைய கிழக்கு மாகாண முதலமைச்சர் சகல கட்சிகளும் சேர்ந்த ஒரு தேசிய அரசாங்கத்தை கிழக்கு மாகாணத்தில் நடத்திக் கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு