நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர்களுக்கு வலைவீச்சு

நீர்கொழும்பு, குரண பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது கடந்த சனிக்கிழமை பாதாள உலகக் கோஷ்டி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்களைத் தேடிப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் வந்த வானைத் தவிர வேறொரு வானில் மேலும் ஒரு கும்பல் இருந்ததாகவும், பொலிஸ் அதிரடிப்படையினர் முதலாவது வானைச் சுற்றிவளைத்ததும் மற்ற வான் தப்பிச் சென்றுள்ளதாகவும், அதில் இருந்தவர்களைக் கைதுசெய்யவே தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில், வஜிரகுமார என்பவர், கடந்த பெப்ரவரி மாதம் களுத்துறை சிறைச்சாலை பஸ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் பிரதான சூத்திரதாரியான பிரபல பாதாள உலக மாகந்துர மடூஷின் நெருங்கிய சகாவென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு