நல்லூர் முருகனைச் சூழ்ந்த 7 லட்சம் பக்தர்கள்

யாழ். நல்லூர் ஆலயத்தின் தேர்த் உற்சவத்தின் போது இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லூர் திருவிழா இடம்பெற்ற காலப்பகுதியில் சுமார் ஏழு இலட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் கலந்து கொண்டதாகவும், நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பெருமளவு வெளிநாட்டு பக்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த பெருந்தொகை பக்தர்களால், யாழ். நல்லூர்ப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழமையை விடவும் இம்முறை அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லிணக்க செயற்பாடே காரணமென குறித்த ஊடகம் தெரிவித்துதிருந்தாலும், இந்த வருடம் நல்லூர்க் கந்தனின் இரதோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதும், பக்தர்கள் மற்றைய காலங்களைவிட அதிகளவில் கலந்து கொண்டமைக்கு ஒரு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு