அரசுக்கு அழுத்தம் கொடுக்க சிவில் அமைப்பு

அரசுக்கு எதிராக கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவும், அதன் செயற்பாடுகளை விமர்சித்து மக்கள் மத்தியில் பரப்புரைகளை முன்னெடுக்கவும் பொதுஜன பெரமுன சார்பில் சிவில் அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்குரிய முயற்சியில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இது தொடர்பில் மஹிந்தவுக்கு சார்பான பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உட்பட பல்துறையிலுள்ள நிபுணர்களுடனும் பஷில் ராஜபக்ஷ பேச்சு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிரணி அரசியல்வாதிகள் அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தால் அது அரசியல் எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுவதனால்தான் நிபுணர்களைக் களமிறக்குவதற்கு மஹிந்த அணி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு