உதயங்க வீரதுங்கவின் கோரிக்கை நிராகரிப்பு

தன்னை கைது செய்யும் உத்தரவை நீக்குமாறு ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன இன்று நிராகரித்துள்ளார்.

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க, சட்டத்தரணிகள் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்திருந்த நிலையில், வெளிநாடு சென்றுள்ள உதயங்க வீரதுங்க நாடு திரும்பும் போது கைது செய்வதை தவிர்க்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.

எனினும், இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதனை தடுக்கும் வகையில் கோரிக்கை விடுக்க வேண்டாம் எனவும், சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென கோட்டை நீதவான் இன்று அறிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்க இழைத்துள்ள தவறுக்கு அவரை எந்த வேளையிலும் கைது செய்ய முடியும் என்பதால் பிடியாணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு