எடுத்தேன், கவிழ்த்தேன் அரசியல் விமோசனத்தைத் தராது

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அரசியல் செய்வது பாதிக்கப்பட்டுப் போயுள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒருபோதும் விமோசனம் பெற்றுத் தராதென, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியலில் முன்னெடுக்கப்பட வேண்டிய தூரநோக்குச் சிந்தனைகள் பற்றி, நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, சிறுபான்மைச் சமூகங்களான தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய்ச் செயற்பட்டு, ஒருமித்து உரிமைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக பல சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல்கள் சூட்சுமமான முறையில் கையாளப்பட்டு வருவதை தூரநோக்குச் சிந்தனையாளர்கள் உற்றுக் கவனித்துப் பார்க்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

கடந்த கால யுத்தத்தால் சிறுபான்மை இனங்கள் திட்டமிட்டு, வேண்டுமென்று சீரழிக்கப்பட்டதாகவும், இப்பொழுது யுத்தம் முடிவடைந்த பின்னரும் இவ்விரு சிறுபான்மைச் சமூகங்களையும் முட்டி மோதவிட்டு சின்னாபின்னமாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஸ்ரீநேசன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கு எரியும் நெருப்பாக எத்தனையோ பிரச்சினைகள் உள்ள அதேநேரம், இந்தப் பிரச்சினைகளில் இன்னும் இன்னும் எண்ணெய் வார்த்து எரிய வைப்பதற்கு எத்தனையோ குழப்பவாதிகள் திட்டம் வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிதானமில்லாத ஆர்ப்பரிப்புகளால் அழிவுகள்தான் மிஞ்சும். பேரினவாத சமூகத்தின் மத்தியில் வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் ஐக்கியப்படுவதற்கு பல தடைகள் கையாளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு