பொலிஸாரை வெட்டிய ஆவா உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்

யாழில் பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக் குழுவினைச் சேர்ந்த 07 நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து கோப்பாய் பொலிஸார் இருவர் மீது ஆவாக் குழுவினைச் சேர்ந்த நபர்கள் சாரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்டிருந்தனர். வாள்வெட்டிற்கு இலக்காகிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸ் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர், விஷேட அதிரடிப் படையினரின் தீவிர தேடுதலின் பின்னர், வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆவாக் குழுவினைச் சேர்ந்த பிரதான நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பயன்படுத்திய வாள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட வாள்கள் மற்றும், மோட்டார் சைக்கிள்களுடன் 07 சந்தேக நபர்களும் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட சமயம், சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த இருந்த நிலையில், மன்றில் பதில் நீதிவான் ஆஜராகிய நிலையில் அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த முடியவில்லை.

07 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்குட்படுத்துமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டு, எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு