ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – ரெஜினோல்ட் குரே

ஊடகங்கள் தம்மை நாடுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களை தீவிரப்படுத்துவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், தெற்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்ளைப் போன்றே யாழ்ப்பாணத்திலும் இடம்பெறுகின்றன. இந்திய அதிரடி திரைப்படங்களின் ஈர்ப்பு காரணமாக இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதுடன், இதுபோன்ற விடயங்களை ஊக்குவிக்க வெளிநாடுகளிலிருந்து இளைஞர்களுக்கு பணம் கிடைப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மக்கள் தாம் வாழ்வதற்காக நேர்மையாக உழைக்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக யுத்த நிலைமைகளுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட அவர்கள் விரும்பமாட்டார்களெனத் தாம் கருதுவதாக ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு