மாவையிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட 06 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால், நேற்று (22) உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவியின் கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிக்க உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்ற உத்தரவுக்கமைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தை மன்றில் சமர்ப்பித்த அதேவேளை, இதேவேளை, புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட 06 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், மேலும், குறித்த வழக்கு தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பாக சி.சி.டி.வி கமெரா பதிவுகளை ஆராய்ந்து மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு