களுதாவளையில் விபத்து – ஒருவர் பலி

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியின் பாதசாரிக் கடவையின் அருகில் இன்று (23) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாரென, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞன், முன்னே சென்ற பிக்கப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், அந்த வாகனத்தில் மோதி கீழே வீழ்ந்தபோது, எதிரே வந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், மோட்டார் சைக்கிளுக்கு மேல் ஏறியமையால், இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

இதில் உயிரிழந்தவர், களுதாவளையைச் சேர்ந்த 22 வயதுடைய ம.இதயராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சடலம், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு