லெபனான்வாழ் இலங்கை பணியாளர்களுக்கான செய்தி

லெபனானில் உரிய ஆவணங்களின்றி தொழில் புரிந்துவரும் இலங்கையர்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் சாட் ஹரீரி தெரிவித்துள்ளார்.

லெபனானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் வசந்த சேனாநாயக்க, அந்த நாட்டுப் பிரதமரை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது, இராஜதந்திர விடயங்கள் மற்றும் இடம்பெயர்ந்து பணி புரிவோர் தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வர்த்தக, பொருளாதார, சமுககலாசரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு