பொலித்தீன் பாவனைத் தடை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வு

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பொலித்தீன் பாவனைக்கான தடை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறிப்பிட்ட பொலித்தீன் பைகள், உணவு பொதியிடும் பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிபோம் உணவுப் பெட்டிகள் என்பவற்றுக்கு தடைவிதிக்கப்படுகின்ற போதிலும், பொலித்தீன் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான மாற்றுத்தீர்வைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளடன், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னதாக இறுதிமுடிவு எடுக்க பிரதமர் இணங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு