டெலோவின் பரிந்துரையை ஏற்க முடியாது – முதலமைச்சர்

தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் அமைச்சுப் பதவி பரிந்துரையை ஏற்க முடியாதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ஸ்ரீகாந்தாவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் தமது முடிவை தெரிவித்துள்ளதுடன், இந்த தீர்மானம் குறித்து டெலோவினால் பரிந்துரைக்கப்பட்ட விந்தன் கனகரத்தினத்துக்கும் முதலமைச்சர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். சுகாதார அமைச்சுப் பதவிக்கு தொழில் ரீதியாக உரிய தகைமையுடையவரே பொருத்தமானவர் என்பதால், டெலோவின் உறுப்பினரான வைத்தியர் குணசீலனை அந்த அமைச்சுப் பதவிக்கு நியமிக்க தாம் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தமது பொறுப்பிலுள்ள போக்குவரத்து அமைச்சில் தம்முடன் இணைந்து பணியாற்ற வருமாறு விந்தன் கனகரத்தினத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ள போதிலும், முதலமைச்சரின் இந்த முடிவை ஏற்க முடியாதென டெலோ தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு