கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

கடந்த 2014ஆம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 02 மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வரை நஷ்டஈடு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் போது மூவர் பலியாகியும், 15 பேர் காயமடைந்தும், சுமார் 280 குடும்பங்கள் வரை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டும் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ள போதிலும், இந்தக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட தமக்கு இன்னும் சரியான நீதி கிடைக்கவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு