ரயன் ஜயலத்துக்கு மீண்டும் விளக்கமறியல்

மருத்துவபீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்த அவர் இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மீண்டும் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இன்றைய வழக்கு விசாரணையின் போது அவரை வரும் 25ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்தை நீதவான் நீதிமன்ற நீதிபதி துலானி எஸ்.சேரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியின் போது சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருக்கும் சொத்துக்களுக்கு சேதம் எற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு