பஸ் கட்டணக் கொள்கையில் மாற்றம்?

பஸ் கட்டண கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்காக, அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வருடாந்த பஸ் கட்டண திருத்தமானது, 2002ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையிலேயே இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதனால், தற்காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூக, பொருளாதார மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, குறித்த கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தேவை உணரப்பட்டுள்ள நிலையில், பஸ் சங்கங்கள் மற்றும் பயணிகள் சங்கங்கள் என்பவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, பஸ் கட்டணங்களில் திருத்தங்களை செய்வதற்காக, புதிய கொள்கையொன்றை தயாரிப்பதற்குரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய அறிஞர் குழுவொன்றை நியமிப்பது தொடர்பில், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு