ஒரு வாரத்திற்குள் உரிய பதில் வழங்கப்படும் – ஆளுனர் ரெஜினோல்ட் குரே

வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதிலளிப்பதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுனருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதற்கமைய, முன்னாள் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரும், தற்போது மடு வலயத்துக்கு கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள மாலினி வெனிற்றன் மற்றும் வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி, தற்போது மன்னார் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் முறையற்ற மீள்நியமனங்கள் தொடர்பாகவே ஆளுனரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

இதுவிடயம் தொடர்பில் கவனமெடுத்திருந்த ஆளுனர், ஒருவார காலத்துக்குள் இது தொடர்பாக ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளரென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு