நுவரெலியாவில் உள்ளூராட்சி மன்றங்கள் அதிகரிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் தெரிவித்ததாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில், நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இது தொடர்பில், ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பான விபரக்கோப்பை அமைச்சரிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் மனோ, அமைச்சர்களான பழனி திகாம்பரம், வீ.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு