கிளிநொச்சியில் வாள்வெட்டுச் சம்பவம் – 06 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிராமத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போது, இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இருவரில் ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், மற்றயவர் இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு