விஜயதாஸ ராஜபக்ஷவின் வெற்றிடத்திற்கு இரு அமைச்சர்கள் நியமனம்

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கிணங்க, நீதியமைச்சராக வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவும், புத்த சாசன அமைச்சராக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய குற்றச்சாட்டிற்காக விஜயதாஸ ராஜபக்ஷவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி நேற்று ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், ஏற்பட்ட அமைச்சுப் பதவி வெற்றிடத்திற்கு இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு