கட்டாக்காலிகளுக்கு இடமில்லை – ரெலோ

அரசியல் கட்டாக்காலிகளுக்கு கட்சியில் இடமில்லை கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாண சபை உறுப்பினர் குணசீலனுக்கு எதிராக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை உறுதியாக முன்னெடுக்கப்படுமென ரெலோ செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிக்கு ரெலோ விந்தனின் பெயரைப் பரிந்துரை செய்திருக்க அந்த இடத்திற்கு ரெலோவின் குணசீலன் அமைச்சராகப் பதவியேற்றிருக்கின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதுகட்சியின் முடிவை மீறிய நடவடிக்கை எனவும், முதல்வர் அழைத்தார் என்பதற்காக ஓடிச்சென்று கபடத்தனமாக கையேந்தி பதவியைப்பெற முடியாது. கட்சியின் தீர்மானத்தைக் கருத்தில் கொண்டுதான் செயற்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இந்தச் செயற்பாடு தொடர்பில் அவருக்கு எதிராகக் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்பதை செயலாளர் நாயகம் என்ற வகையில் உறுதியாகத் தெரிவிப்பதாகவும், டெனிஸ்வரனுக்கு ஓர் நீதி குணசீலனுக்கு இன்னொரு நீதியாக அமைய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு