வடகொரியாவின் மற்றுமொரு ஏவுகணைப் பரிசோதனை

வடகொரியா தமது கிழக்கு கடற் பிராந்தியத்தில் பல ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்களை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருவதாகவும், வடகொரியாவின் காங்வான் மாகாணத்திலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை 250 கிலோ மீற்றர் தூரம் சென்று கடலில் விழுந்துள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நிலைமைகளை கூர்ந்து அவதானித்து வருவதாக தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள இதேவேளை, இந்த ஏவுகணை குவாம் தீவை இலக்கு வைத்து ஏவப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு