இ.போ.ச சாரதி மீது தாக்குதல் – வட்டுக்கோட்டையில் சம்பவம்

வட்டுக்கோட்டையில் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி ஒருவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டுக்கோட்டை பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் கூர்மையான ஆயுதத்தால் குறித்த சாரதியை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

28 வயதான தேவேந்திரன் லோகேந்திரன் என்ற வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்தவரே குறித்த தாக்குதலில் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு