சிறந்த சமூக நடைமுறைகளைப் பெற்றுக்கொள்ள செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

பழங்காலத்து பெருமைகளை பாடிக்கொண்டிருக்காது அக்காலத்தில் இருந்த சிறந்த சமூக நடைமுறைகளை பெற்றுக்கொள்வதற்காக செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதுடன், பழங்காலத்து சமூகத்தின் உயரிய சமூக நெறிமுறைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் பிற்காலத்து சமூகத்திற்காக கடத்திச்சென்றுள்ள போதிலும், அவைதொடர்பில் தற்போது பெருமைகள் பேசப்படுகின்றதே தவிர, அதனை பின்பற்றும் சமூக நோக்கு ஒருவருக்கும் இல்லை என்பதால், பழமையின் பெருமைகளை தற்கால சமூகம் கையாளும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு