அமெரிக்காவை சூறையாடிய கடும் புயல்

அமெரிக்காவில் கடந்த 12 ஆண்டுகால வரலாறு காணாத பெரும் புயல் நேற்று தாக்கியது.

மணிக்கு சுமார் சுமார் 210 கிலோ மீற்றர் வேகத்தில் சீறிவந்த இந்த பெரும் புயல் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11.00 மணியளவில் அரன்சாஸ் மற்றும் ஓகோன்னோர் துறைமுகங்களுக்கு இடையே டெக்சாஸ் மாநிலத்தின் தென்பகுதியை உலுப்பியெடுத்துள்ளது. அதிகாலை 2.00 மணியளவில் சீற்றம் தணிந்து மணிக்கு 125 மைல் வேகத்தில் வலுவிழந்த ஹார்வே புயல் டெக்சாஸ் மாநிலத்தின் பல பகுதிகளை துவம்சம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவை தாக்கிய கத்ரீனா புயலுக்கு பிறகு நேற்று வீசிய இந்தப் புயல் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்தனர். பலத்த மழைக்கு இடையில் கோரத்தாண்டவம் ஆடிய ஹார்வே புயலின் எதிரொலியாக பல மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலைகளிலுள்ள மின்சார விளக்கு கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் சில கட்டிடங்களின் மீது விழுந்துள்ளதுடன், மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 02 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வீதிகளில் விழுந்திருக்கும் மரங்களை அகற்றும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், பல முக்கிய வீதிகளின் குறுக்கே மரங்கள் விழுந்துகிடப்பதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில், அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

அதிகாலை 4.00 மணியளவில் டெக்சாஸ் மாநிலத்தை புயல் கடந்த பின்னரும் மாநிலத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை வரை கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு