அரசியலமைப்பு விவகாரம்; அடுத்த மாதம் இறுதித் தீர்மானம்

புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசியலமைப்புச் சட்டவாக்க நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, அறிக்கை தொடர்பான கருத்துக்களையும் யோசனைகளையும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அரசியலமைப்புச் சட்டவாக்க நடவடிக்கைக்குழு 21 உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

கருத்துக்கள் மற்றும் யோசனைகள் கிடைத்த பின்னர், நடவடிக்கைக்குழு அடுத்த மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் கூடிய பின்னர், குழுவின் இறுதி தீர்மானத்தை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு