கூட்டு அரசாங்கத்தில் தொடர்வது குறித்து டிசெம்பரில் முடிவு

இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையிலான உடன்படிக்கை காலம் முடிவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தொடர்ந்தும் இருக்குமா இல்லையா என்று தீர்மானிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் செயற்படுவதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாகவும், இதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூடி தீர்மானத்தை எடுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதெனத் தீர்மானித்தால், அரசாங்கத்தில் இருந்து விலகி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட எடுக்கும் தீர்மானமாக இருக்காது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு