சுயாதீனமாகச் செயற்படுவதற்கான வாய்ப்பு அவசியம்

அரச பணியாளர்களுக்கு சுயாதீனமாக செயற்பட சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென தேசிய தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் ரீதியான நியமனங்கள் மற்றும் அரசியல் ரீதியான தொழிற்சங்கங்கள் காரணமாக அரச பணிகள் பொதுமக்கள் பாரிய அதிருப்திக்கு உள்ளாகியிருப்பதாகவும், அரச பணிகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்காக அரசியல் தலையீட்டுடனான நியமனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஊடாக மற்றும் பொலிஸ் அறிக்கைகளை உள்ளடக்கிய வகையில் அனைத்து ஆவணங்களையும் கவனத்தில் கொண்டு தொழில்வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் தேசிய தொழிற்சங்க சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு