மிளகு உற்பத்தியாளர்களை அரசு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு

மிளகு தொடர்பில் குறைந்த விலையை பெற்று தருவதாகக்கூறி அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மொனராகலை மடல்குபுர நகரில் இன்று விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் கலந்து கொண்டு அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கும் போதே குறித்த குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், தாம் மிளகு தொடர்பில் 1200 ரூபா நிர்ணயித்த போதிலும் அதனை அரசாங்கம் 900 ரூபா நிர்ணயித்து பெற்று, மிளகை பெற்று கொள்வதாக கூறியபோதிலும் அதனை இன்னும் பெற்று கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு