இளம் வாக்காளர்கள் வாக்களிப்புத் தொடர்பில் தெளிவடைதல் அவசியம்

வாக்களிக்கத் தகுதி வாய்ந்த இளம் வாக்காளர்கள் தேர்தல்களில் வாக்களிக்க அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு பெரும்பாலான பிரதேசத்தில் கடந்த வருட பதிவுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 18 ஆயிரம் வாக்காளர்கள் மீள்பதிவு செய்யவில்லை எனவும், குறிப்பாக கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவ, கொலன்னாவ, மஹரகம மற்றும் கடுவல பிரதேசங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில், அரசியல்வாதிகள் அசமத்தனமான போக்கை கடைப்பிடிப்பதனாலேயே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் எனவும், இதுதவிர, நவீன மாடி வீட்டு தொகுதிகளில் வசிக்கு வாக்காளர்கள் தமது வீட்டில் வசிப்பவர்கள் குறித்த விபரங்களை வாக்காளர் பதிவேட்டில் பதிய முன்வருவதில்லை எனவும், அடுத்த வருடம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சி தேர்தல்கள் குறித்து முன்னோடி ஆலோசனை திட்டம் குறித்த சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு