ஐரோப்பிய ஒன்றிய நிபுணர் குழு வரவுள்ளது

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை வழங்குவது குறித்த இறுதி அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு இலங்கை வரவுள்ளது.

அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த ஐந்து நிபுணர்கள் இது தொடர்பாக இலங்கையின் தற்போதைய நிலைமையை ஆராயும் நோக்கில் பிரஸல்ஸில் இருந்து வருகை தரவுள்ளனர். அடுத்த மாதம் ஐந்தாம் திகதியிலிருந்து 13ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள், இலங்கையினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வார்கள் எனவும், இவர்களின் ஆய்வு அறிக்கை பின்னர் 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒன்றுகூடலில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இந்த புதிய திட்டத்திற்கு அமைய, 260 கோடி யூரோக்களை ஐரோப்பிய ஒன்றியம் சலுகை அடிப்படையில் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு