எதிர்காலத் தலைமுறை ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்படும் – சமல் ராஜபக்ஷ

ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அரச சொத்துக்களை மீட்பதற்கு போராட வேண்டிய சூழல் ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஹம்பாந்தோட்டை துறைமுகம், 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, மத்தள விமானத் தளத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இவை மீட்கப்படும் போது, நான்கு தலைமுறைகள் கடந்திருக்கும். இதற்காக சில வேளை, இலங்கையின் எதிர்கால தலைமுறையினர் ஆயுதம் ஏந்தவேண்டி வரும் எனவும் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு