வடகிழக்கில் மண் அகழ்வு அதிகரிப்பு

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பொண்டுகள்சேனை பகுதி மற்றும் செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட பாலாமடு, புத்தம்புரி மற்றும் சின்னப்பொத்தானை உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்ணுக்காக போராடிய பின்னரும் மண் கொள்ளையர்களிடமிருந்து மண்ணுக்காக மீண்டும் அஹிம்சை வழியில் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் மற்றும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ள நிலையில், வாகனேரி பகுதியில் தவணை கண்டம், பள்ளக்கட்டு, தரசேனை கண்டம், மக்குளான கண்டம், பள்ளிமடு கண்டம், அடம்படி வட்டவான் பருத்திச்சேனை கண்டம் மற்றும் பொண்டுகள்சேனை உட்பட்ட பகுதிகளில் தினமும் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் மக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், இவ்விடயமாக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லையென பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு