10 பேரை சிறைப்பிடிக்க முயற்சி

புதிய நீதியமைச்சர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தத்தை பிரயோகித்து குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 10 பேரை சிறையடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கத்தின் அமைச்சர்களின் வழக்குகளை பின்தள்ளுவதற்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துவதற்குமாகவே அவர் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்தாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூட்சி சபை தேர்தலுக்கு முன்னதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சார்ந்த 10 பேரை சிறையில் தள்ளுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் பொறுப்பு புதிய நீதியமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு