மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

யாழ். மண்டைதீவு பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

மண்டைதீவு கடற்பரப்பில் நேற்று படகில் பயணம் செய்த மாணவர்கள் ஆறு பேர் படகு கவிழ்ந்ததால் உயிரிழந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மாணவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் ஏதேனும் அருந்தியிருந்தனரா என்பது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மாணவர்களின் உடற்பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு