போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு உறவுகள் அழைப்பு

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாளை முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு, அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் இன்று (29) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அழைப்பை விடுத்துள்ளதுடன், நாளை சர்வதேச காணாமல் போனோர் தினமாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், அந்தந்த மாவட்டங்களில் இடம்பெறவுள்ள நிலையில், அனைத்து பொதுமக்கள், அமைப்புகள், அரசியல்வாதிகளையும் குறித்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த எமது புலம்பெயர் உறவுகளும், எமக்காக ஆதரவு தெரிவிக்கும் வகையில், போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு