வடகொரியாவைக் கண்டித்தது ஜப்பான்

தமது நாட்டுக்கு மேலாக ஏவுகணை செலுத்தியமை தொடர்பில் வடகொரியாவுக்கு ஜப்பான் கண்டனம் வெளியிட்டுள்ளது.

வடகொரியா நேற்று செலுத்திய ஏவுகணை கடலில் வீழ்வதற்கு முன்னதாக ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு மேலாக சென்றதாகவும், வடகொரியாவின் இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தல் என்றும் ஜப்பான் பிரதமர் ஸின்ஸோ அபே தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் இந்த நடவடிக்கை தமது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அது பெரும் பாதிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டமொன்றை நடத்த எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு