வடக்கு பிரச்சினைக்குரிய தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம் – அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்

வடக்கில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதுடன், வடக்கில் நிலவும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போமென அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்கொட சிறிஞானரத்தின தேரர் தெரிவித்தார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட மகாநாயக்க தேரர் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் சர்வமதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த சந்திப்பின் போது, மதப் பிரச்சினைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள், போதைவஸ்து பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்ட நிலையில், அந்த கலந்துரையாடலின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எல்லோரும் ஒன்றுபட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும். புத்தபெருமானுடைய பௌத்த சமயத்தில் கூறப்பட்டுள்ள போதனைகள் மனிதர்கள் மட்டுமன்றி எல்லா உயிர்களையும் அழிக்காமல் சிறப்பாக வாழ வழிசெய்ய வேண்டுமென்பதே. சமய வேறுபாடுகள், ஜாதி வேறுபாடுகள் பல இருக்கின்றது. எல்லா சமயமும் போதிப்பது சமாதானம் ஐக்கியம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையே. மக்களின் பிரச்சினையை தீர்க்க ஒன்றிணைந்து கலந்துரையாடுவது சிறப்பாகும்.

மனிதர்கள் சகோதரத்துவத்துடன் எல்லா உரிமையும் வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் தேவை இருக்கின்றது. தவையை நிறைவு செய்ய எம்மால் முடியும். ஜாதி, குலம் வகுக்கப்பட்டதனை விட மனிதர்கள் எல்லாரும் தனிது புத்தியுள்ள மனிதராக எல்லாம் ஒன்று என்ற கொள்கையில் வாழ வேண்டும். பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது, தாகம் வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். எல்லாருக்கும் ஒன்றுபட்ட தேவைகள் உள்ளன.

நாடு முன்னேற வேண்டும். நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பல பிரச்சினைகள் குறைபாடுகளை மதகுமார்கள் தெரிவித்துள்ளார்கள். ஜனாதிபதியுடன் பேசி தீர்வுகள் எடுக்கப்படும். வடக்கு மக்கள் சிங்களம் படிக்க வேண்டும். மக்களுக்குள்ள குறைபாடுகளை தெரிந்துகொள்ள மொழி அவசியம். மொழி தெரிந்தால், புரிந்துகொண்டு யுத்தம் இல்லாமல் வாழமுடியும். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கின்றோம். பொருளாதார அபிவிருத்தி வாழ்வாதாரத்தினையும் கட்டி எழுப்ப வேண்டும். மீண்டும் சிங்கள மகா வித்தியாலயத்தினை இயக்குவதற்கும் ஆளுநரிடம் கலந்துரையாடி முடியுமானளவிற்கு உதவுவோம்.

வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்து பிரச்சினைக்குரிய தீர்வினைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கையினை எடுப்போம். சந்தோஷமான பயணத்தின் ஊடாக தான் இந்தப் பிரச்சினைகளை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றதாகவும் சொல்கின்றது. நேரில் பயணிக்கும் போது உண்மைத் தன்மையை அறியக்கூடியதாக இருக்கின்றது என்றும் மகாநாயக்க தேரர் மேலும் தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு