35 பவுண் நகை திருட்டு – அரியாலையில் சம்பவம்

வீடொன்றில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்து 35 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

யாழ்.அரியாலை பகுதியில் நேற்று இரவு இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அரியாலை பகுதியில் பில்தெனியா ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் இருந்தவர்கள் மீதே மயக்க மருந்து தெளித்து கொள்ளையடித்துள்ளனர்.

வீட்டிற்கு வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் இரவு வேளை உறங்கிக்கொண்டிருந்த போது, வீட்டின் கூரையினைப் பிரித்துக்கொண்டு உள்ளே சென்ற ஒருவர் மயக்கமருந்தை தெளித்துவிட்டு அங்கிருந்த 35 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

காலை வீட்டிற்குச் சென்ற உறவினர் ஒருவர் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், மயக்கமுற்ற 05 நபர்களையும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு